நாமக்கலில் தனியார் கல்லூரி பேருந்து மீது மினி ஆட்டோ மோதிய விபத்தில் மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பரமத்தி வேலூர் நோக்கி வந்து கொண்டிருந்த விவேகானந்தா கல்லூரி பேருந்து மீது பாண்டாமங்கலத்தில் இருந்து வந்து கொண்டிருந்த மினி வேன் மோதியது. பேருந்தின் ஓரத்தில் மினி வேன் உரசியதால், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.