நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 34 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. தரைத்தளம் மற்றும் மூன்று தளங்கள் கொண்டதாக அமையவுள்ள மினி டைடல் பூங்கா கட்டடத்தில் 500 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரியும் வகையில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இந்த டைடல் பூங்கா மூலம் சுமார் 600 பேர் வேலை வாய்ப்பு பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையும் படியுங்கள் : தமிழகத்துக்கு தண்ணீர்.. கர்நாடக அரசை அதிர வைத்த காவிரி மேலாண்மை