ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஓடினர். தூய்மை பாரத இயக்கம் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நடைபெற்ற இந்த மினி மாரத்தான் போட்டியில் ஆண்கள்,பெண்கள், சிறுவர், சிறுமியர் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, ஓட்டப்பாலம், 5 முனை சாலை, கிருஷ்ணா தியேட்டர் மற்றும் சர்வீஸ் சாலை வழியாக 8 கிலோமீட்டர் தூரத்திற்கு ஓடினர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் வழங்கப்பட்டன.