நீலகிரி மாவட்டம் உதகையில் இருந்து கூடலூர் செல்லக்கூடிய மலைப்பாதையில் 250 அடி பள்ளத்தில் மினிவேன் பாய்ந்து விபத்துக்குள்ளானதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 22 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். மினிவேன் கீழே விழாதவாறு மரத்தின் மீது மோதி நின்றதையடுத்து, தகவல் அறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி உள்ளே இருந்த 22 பேரையும் பத்திரமாக மீட்டனர்.