பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்ற விவசாயிகள் கோரிக்கை குறித்து முதலமைச்சரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார். ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த பால்வளத் துறை ஆய்வுக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆவின் பாலில் எந்தவொரு கலப்படமும் இல்லை என்று கூறினார்.