மிலாது நபி பண்டிகையை முன்னிட்டு, கோயம்புத்தூர் கோட்டைமேடு பகுதியில் உள்ள பள்ளிவாசலில், விடிய விடிய மட்டன் பிரியாணி தயாரிக்கப்பட்டு, சுமார் ஒரு லட்சம் பேருக்கு விற்பனை செய்யப்பட்டது. சுமார் 60 பெரிய பாத்திரங்களில் 3 டன் ஆட்டிறைச்சியை கொண்டு மட்டன் பிரியாணி தயாரிக்கப்பட்டு, ஒரு கிலோ பிரியாணி 500 ரூபாய்க்கு வழங்கப்பட்டது. அதிகாலை 6 மணி முதலே பிரியாணி விற்பனை தொடங்கியது. வியாபார நோக்கம் இன்றி பொது மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் காலையிலேயே பிரியாணியை வாங்கி சென்றனர். அனைத்து மதத்தினருக்கும் குறைந்த விலையில் பிரியாணி விநியோகம் செய்வதற்காக பிரியாணி தயாரிக்கும் பணி, நேற்று இரவு முதலே நடைபெற்றது. 135 ஆண்டுகள் பழமையான கோட்டைமேடு பள்ளிவாசலில் 70 வருடங்களாக இதுபோல் செய்வதாக, பள்ளிவாசல் நிர்வாகிகள் தெரிவித்தனர்.