எம்ஜிஆர் சிலையை சேதம் செய்தவர்களை, கைது செய்ய வலியுறுத்தி. அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மதுரை, அவனியாபுரத்தில், கடந்த 30 ஆண்டுகளாக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் சிலை இருந்து வந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு சில சமூக விரோதிகள் எம்ஜிஆர் சிலை வைக்கப்பட்டிருந்த இரும்பு கதவை உடைத்து சிலையை சேதப்படுத்தியதுடன் அதை சாலையில் வீசி இருந்தனர். இந்த நிலையில், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி இன்று காலை அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய போதும், சாலை மறியலை கைவிடாததால், அதிமுகவினரை கைது செய்து வாகனத்தில் ஏற்றி அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.