எம்ஜிஆர், ஜெயலலிதா மீதும் தமக்கு அதீதமான மதிப்பு உள்ளதாகவும், அவர்களை ஒரு சாதிக்குள் சுருக்கவில்லை என்றும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். ஜெயலலிதா தன்னை பார்ப்பன பெண் என்று சட்டமன்றத்திலேயே வெளிப்படையாக கூறியதால், கலைஞரை எதிர்த்த அளவுக்கு எம்.ஜி.ஆரையோ, ஜெயலலிதாவையோ பார்ப்பனர்கள் எதிர்க்கவில்லை என்பதை குறிப்பிட்டுதான் தாம் பேசியதாக திருமா விளக்கம் அளித்தார்.