சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே மேட்டுமாரியம்மன் கோயில் ஆடித்திருவிழாவை ஒட்டி நடைபெற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்திக்கடன் செலுத்தினர். முதலில் கோயில் பூசாரி பூங்கரகத்துடன் தீமிதித்த நிலையில், ஆண்கள், பெண்கள் மற்றும் சிலர் கைக்குழந்தைகளுடன் தீக்குண்டத்தில் இறங்கி வழிபாடு செய்தனர். மேலும் கார், ஆம்னி வேன், மினி ஆட்டோ, இளநீர், ஆப்பிள் உள்ளிட்ட பல்வேறு அலகுகளை முதுகில் குத்திக் கொண்டு கோயில் வரை இழுத்து வந்த காட்சி அனைவரையும் வியக்க வைத்தது.