சென்னை திருவொற்றியூர் பகுதியில் மெத்தபெட்டமைன் போதைப் பொருளை விற்றதாக பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான உயர்ரக போதைப்பொருள், கார் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வியாசர்பாடி எம்கேபி நகரை சேர்ந்த 55 வயதான ஜரினா சல்மா என்ற பெண், போதைப்பொருளை சப்ளை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.