கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் ஆரம்ப கட்ட பணிகள் வருகிற ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் தொடங்க இருப்பதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. கோவை விமான நிலையம் அருகே மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் சித்திக், கோவையில் 34.8 கிலோ மீட்டர் தூரம் மற்றும் 32 நிறுத்தங்கள் இருக்கும் வகையில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படுவதாக தெரிவித்தார்.