புதுச்சேரியில் பரவி வரும் டெங்கு மற்றும் சிக்கன்குனியாவால் அங்குள்ள மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிவது அண்டை மாநிலமான தமிழக மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. புதுச்சேரியிலிருந்து தமிழகத்திற்கு படிப்பு, வேலை உள்ளிட்டவற்றிக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்லும் நிலையில், கடந்த சில நாட்களாகவே தமிழகத்திலும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் அலுவலகம் மற்றும் நம் அண்டை வீடுகளில் வசிப்பவர்கள் காய்ச்சல், உடல்வலி, தலைவலி என கூறுவதை நாம் அதிகம் கேட்க முடிகிறது. இந்நிலையில் மழைக்காலத்தில் மனித குலத்தை அச்சுறுத்தும டெங்கு உள்ளிட்டவற்றிலிருந்து நம்மை எப்படி தற்காத்துக் கொள்வது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எந்தெந்த உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும்.