தென் தமிழகத்தில் இருந்து அதிகளவில் ஆக்கி வீரர்கள் வருவதால் அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் போட்டி மதுரையில் நடைபெறவுள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில், ஜூனியர் உலக கோப்பை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து ஜூனியர் உலக கோப்பைக்கான இலட்சிணையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.