திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரில் நடைபெற்ற மருத்துவ முகாமில் நலத்திட்ட உதவிகளை பெற பொதுமக்கள் முண்டியடித்த நிலையில், இதனை வீடியோ எடுத்த செய்தியாளரை விழாவை ஏற்பாடு செய்த மாமன்ற உறுப்பினர் சாந்தகுமாரி ஒருமையில் விமர்சித்துள்ளார். விழாவிற்கு முறையாக ஏற்பாடு செய்யாமல் செய்தியாளரை ஒருமையில் பேசியது முகசுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.