கோவை மாவட்டம் காரமடை நகர் மன்ற கூட்டத்தில் வாரச்சந்தை சுங்கவரி வசூல் ஏலம் தொடர்பாக நடந்த கூட்டத்தில் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. நகர் மன்ற தலைவர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், உறுப்பினர்கள் விலைப்பட்டியல் முறையாக இல்லை என்றும் வெளிப்படையாக நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து பேசினார்.