திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி, தனது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சரை நேரில் சந்தித்தபோது முதலமைச்சர் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்த நிலையில் துர்கா ஸ்டாலினும் கனிமொழியை வாழ்த்தினார்.