சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில், மெகா சைஸ் திரையில் திரைப்படம் திரையிடப்பட்டது. வார இறுதி நாட்களில் திரைப்படம் திரையிட்டு காட்டுவது என சுற்றுலாத்துறை முடிவெடுத்த நிலையில், நடிகர் சிம்பு- திரிஷா நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் திரையிடப்பட்டது.