தங்கத்தில் முதலீடு செய்தால், 25 சதவீதம் லாபம் தருவதாக கூறி ஆசைவார்த்தை. நூற்றுக்கும் மேற்பட்டோரை மூளைச்சலவை செய்த நகைக் கடை வியாபாரி. பல கோடி ரூபாயை சுருட்டிவிட்டு தலைமறைவான நபர். அடமானம் வைத்த நகைளையும் எடுத்துக்கொண்டு ஓட்டம். தங்கத்தை வைத்து மெகா மோசடியில் ஈடுபட்ட நகைக்கடை வியாபாரி சிக்கினாரா. நடந்தது என்ன?வாணியம்பாடி பஜார் பகுதியில பல கடைகள், பல வணிக வளாகங்கள் இயங்கிட்டு இருக்கு. அப்ப திடீர்ன்னு 11 பேரு கையில ஒரு கம்ப்ளைண்ட் லெட்டரோட வாணியம்பாடி போலீஸ் ஸ்டேஷனுக்கு போய்ருக்காங்க. சார், தங்கத்துல பணத்த முதலீடு பண்ணச் சொல்லி, எங்க கிட்ட இருந்து செந்தில்-ங்குற நகை கடை வியாபாரி, பல கோடி ரூபாய மோசடி பண்ணிட்டான், இப்ப அவன் எங்க இருக்கான்னு தெரியலனு சொல்லிருக்காங்க.பொதுமக்கள் சொன்னத வச்சு, அந்த புகார வாங்குன போலீஸ், நகைக் கடை வியாபாரி செந்தில் குமாரோட வீட்டுக்கு போய் பாத்துருக்காங்க. அப்ப வீட்ட காலி பண்ணிட்டு அவரு வேற எங்கையோ தலைமறைவானது தெரிய வந்துருக்கு. அடுத்து செந்தில்குமார பத்தி அவரோட உறவுக்காரங்க எல்லார் கிட்டயும் விசாரிச்சுருக்காங்க போலீஸ். ஆனா, அவங்க கிட்ட இருந்தும் எந்த ஒரு துப்பும் கிடைக்கல. அதுக்கடுத்து செந்தில்குமார் எங்க இருக்காருன்னு தெரிஞ்சுக்க அவரோட செல்போன் நம்பர டிரேஸ் பண்ணிருக்காங்க. அப்ப செல்போன் சிக்னல் சென்னை சைதாப்பேட்டையில காட்டிருக்கு.உடனே சைதாப்பேட்டைக்கு படையெடுத்த போலீஸ், சொந்தக்காரங்க வீட்ல பதுங்கி இருந்த செந்தில்குமார பிடிச்சு அவர கஸ்டடியில எடுத்து விசாரிக்க ஆரம்பிச்சாங்க.திருப்பத்தூர்ல உள்ள வாணியம்பாடி பகுதிய சேந்த செந்தில்குமார் நகைக்கடை பஜார்ல, ரூபி ஜூவல்லரி-ங்குற நகைக் கடைய நடத்திட்டு இருந்தாரு. இவருக்கு கல்யாணமாகி குழந்தைகளும் இருக்கு. பொருளாதார ரீதியா எந்த ஒரு பிரச்னையும் இல்லாம நல்ல வசதி வாய்ப்போட வாழ்ந்துட்டு இருந்த செந்தில்குமாருக்கு இன்னும் பணத்தாசை அதிகமாகிருக்கு. சமீப காலங்களாவே தங்கம் விலை அதிகரிச்சுட்டு இருக்குறதால அதவச்சு பல கோடிகள சம்பாதிக்கனும்னு நினைச்ச செந்தில்குமார், பொதுமக்கள ஏமாத்துறதுக்கும் மாஸ்டர் ப்ளான் போட்ருக்காரு.அதுக்காக முதல்ல தன்னோட சொந்தக்காரங்க, ப்ரண்ட்ஸ் அக்கம் பக்கத்துல உள்ளவங்க எல்லாருக்கும் ஃபோன் பண்ண செந்தில்குமார், நான் ஒரு புது பிசுனஸ் ஸ்டார்ட் பண்ண போறேன், தங்கம் விலை அதிகமாகிட்டே இருக்கு, நீங்க 1 லட்சம் ரூபாய்ல இருந்து 20 லட்சம் ரூபாய் வரை முதலீடு பண்ணிங்கனா, தங்கம் விலை உயரும் போது அதுல கிடைக்குற லாபத்துல 25 சதவீதத்த உங்க கிட்ட கொடுத்துருவேன்னு சொல்லிருக்காரு. கிட்டதட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள மூளைச் சலவை பண்ண செந்தில்குமார் அவங்கள இந்த குழுவுல இணையவும் வச்சுருக்காரு. ஆனா லாபம் கிடைச்ச முதல் மூணு மாசம் மட்டும் பணத்த கரைக்டா கொடுத்த செந்தில்குமார் அதுக்கப்புறம் பொதுமக்களுக்கு பணத்த கொடுக்காம காலம் தாழ்த்திக்கிட்டே இருந்துருக்காரு.கொஞ்சம் நாளைக்கு முன்னாடி பாதிக்கப்பட்ட ஒருத்தரு, செந்தில்குமாருக்கு ஃபோன் பண்ணி கடைசி மூணு மாசமா நீங்க பணத்த ஏன் சரியா கொடுக்கலனு கேட்ருக்காரு. அதுக்கு செந்தில்குமார், எல்லாப் பணத்தையும் மொத்தமா அடுத்த மாசம் கொடுத்துறேன்னு சொல்லிருக்காரு. இதனால செந்தில்குமார் மேல சந்தேகமடைஞ்ச அந்த நபர், எங்களுக்கு இந்த பிசுனஸே வேண்டாம், தயவு செஞ்சு நாங்க கொடுத்த காச திருப்பி கொடுத்துருங்கன்னு கெஞ்சுருக்காரு. ஆனா, அதுக்கும் சரியான பதில சொல்லாம ஏதேதோ பேசி சமாளிச்சுருக்காரு செந்தில்குமார். இதனால ஆத்திரமடைஞ்ச அந்த பாதிக்கப்பட்ட நபர், எங்க பணத்த திருப்பி கொடுக்கலனா, உங்க மேல போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைண்ட் கொடுத்துருவோம்ன்னு சொல்லி மிரட்டிருக்காரு.ஆனா, இத பெருசா கண்டுக்காத செந்தில்குமார் கிடைச்ச வரைக்கும் லாபம்ன்னு நினைச்சு, பொதுமக்கள் அடமானம் வச்ச நகைகளையும் திருடிட்டு நைட்டோட நைட்டா வீட்டையும் காலி பண்ணிட்டு குடும்பத்தோட அந்த ஊரையே காலி பண்ணிட்டு சென்னை சைதாப்பேட்டையில உள்ள சொந்தக்காரங்க வீட்டுக்கு போய்ட்டாரு. செந்தில்குமார் கடைய காலி பண்ணிட்டு போன விஷயம் பொதுமக்களுக்கு ஆரம்பத்துல தெரியல. செந்தில்குமாரோட கடை ரொம்ப நாளா பூட்டிக் கிடந்தத வச்சும், அவரோட செல்போன் நம்பர் ஸ்விட்ச் ஆப் ஆகிருந்தத வச்சும் தாங்கள் ஏமாற்றப்பட்டத தெரிஞ்சுக்கிட்ட பொதுமக்கள் வாணியம்பாடி போலீஸ் ஸ்டேஷன்க்கு போய்ட்டு கம்ப்ளைண்ட் பண்ணிட்டாங்க. அதுக்கடுத்து செந்தில்குமாரோட செல்போன் நம்பர ட்ரேஸ் பண்ண போலீஸ் அவர அரெஸ்ட் பண்ணி விசாரிச்சுட்டு இருக்காங்க... இதையும் பாருங்கள் - Nigazh Thagavu | கொழுந்தனுடன் ஆபாச CHATTING - நடுரோட்டில் கணவன் செய்த கொடூரம் | Today Crime News