சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே சட்டவிரோதமாக செயல்பட்டதாக கூறி தனியார் கல்குவாரிக்கு 91 கோடி ரூபாய் அபராதம் விதித்து சார் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மல்லாக்கோட்டையில் செயல்பட்டு வந்த மேகா புளுமெட்டல் கல்குவாரியில் வெடி வைத்தபோது பாறைகள் சரிந்து விழுந்து 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக, விசாரணை மேற்கொண்ட தேவகோட்டை சார் ஆட்சியர் ஆயுஸ் வெங்கட வட்ஸ், கல்குவாரி விதிகளை மீறி செயல்பட்டு வந்ததை கண்டுபிடித்தார். இதனையடுத்து, கல்குவாரி உரிமையாளர் மேகவர்ணம் என்பவரது வீட்டில் 91 கோடி ரூபாய் அபராதத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது.