மதுரை மீனாட்சியம்மன் கோவிலில்வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், சாமி தரிசனம் செய்ய மூன்று மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. சபரிமலை சீசனை முன்னிட்டு கேரள செல்லும் ஐயப்ப பக்தர்கள், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். இதன் காரணமாக வழக்கத்துக்கு மாறாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.