கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வடமலம்பட்டி பகுதியில் திறந்த வெளியில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். விளைநிலங்களில் மருத்துவக் கழிவுகளை கொட்டிச்செல்லும் மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.