நெல்லை மாவட்டத்தில் மீண்டும் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதவகுறிச்சி அருகே சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ள காலாவதியான மருந்து பாட்டில்கள், மருத்துவ குப்பிகள் மற்றும் சிரிஞ்ச்-கள் பாதி எரிந்த நிலையில் காணப்பட்டுள்ளன. மருத்துவக்கழிவுகளை கொட்டிய மர்ம நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.