திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி வாரச்சந்தை பகுதிகளில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால் நோய்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஆரம்பப்பள்ளி,அங்கன்வாடி மையம் மற்றும் சிப்காட் பிரதான சாலையோரத்தில், பயன்படுத்தப்பட்ட ஊசிகள், குளுக்கோஸ் பாட்டில்கள் உள்ளிட்ட மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் நோய் தொற்று ஏற்படும் என்பதால் சாலை ஓரத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.