நாமக்கல் மாவட்டம் தும்மங்குறிச்சியில் செயல்பட்டு வரும் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையின் பின்புறத்தில், குவியல் குவியலாக கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் ஊசி உள்ளிட்ட கழிவுகள் மருத்துவமனைக்கு பின்புறத்தில் உள்ள காலி நிலத்தில் கொட்டிக்கிடப்பதை நியூஸ் தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர் வீடியோ எடுத்தார். அப்போது, அங்கு சென்ற பெண் மருத்துவர் ஒருவர் செய்தி எடுக்க விடாமல் தடுத்து , தூய்மை பணியாளரை வைத்து மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.