சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்ற 4வது ஆசிய அலைச்சறுக்கு போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கங்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். 18 நாடுகளை சேர்ந்த 120 வீரர்கள் போட்டியில் பங்கேற்ற நிலையில், முதல் 4 இடங்களை பிடித்த வீரர்களுக்கு பதக்கங்களை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.