மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மேற்கொள்ளும் சமத்துவ நடைபயணத்தை திருச்சி, தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். திருச்சியில் தொடங்கிய பயணம் வரும் 11ஆம் தேதி மதுரையில் முடிவடையவுள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நடைபயணத்தின் போது, வைகோ திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரமும் மேற்கொள்ள உள்ளார். முதல் நாளில் தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் துவங்கிய நடைபயணம், நீதிமன்ற சாலை, மேஜர் சரவணன் நினைவு ஸ்தூபி, மத்திய பேருந்து நிலையம், கிராப்பட்டி வழியாக சென்று, எடமலைப்பட்டி புதூரில் நிறைவடைகிறது. இந்த நிகழ்ச்சியில் விசிக தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன், உள்பட ஏராளமானோர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்துள்ளனர்.