எங்களுடைய கட்சி குறைந்தபட்ச அங்கீகாரம் பெறுவதற்கு, வரும் சட்டமன்ற தேர்தலில் குறிப்பிட்ட அளவு சீட் பெற வேண்டும் என்பது எங்களின் ஆசை என மதிமுக துணை பொதுச் செயலாளர் துரை வைகோ தெரிவித்தார். திருப்பூரில் நடைபெறும் செயல்வீரர் கூட்டத்தில் பங்கேற்க, விமானம் மூலம் கோயம்புத்தூர் வந்த போது செய்தியாளரை சந்தித்த துரை வைகோ, எங்களுக்கு இத்தனை சீட் வேண்டும் என டிமாண்ட் வைப்பதாக தவறாக சித்தரிக்கப்படுவதாகவும், கூட்டணியுடன் பேசி தலைமை தான் இறுதி முடிவு எடுக்கும் எனவும் தெரிவித்தார்.