விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மயிலம் முருகன் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகமும், தொடர்ந்து கொடியேற்றமும் நடைபெற்றது. அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.