சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு செய்ய அலைக்கழிப்பதாக கூறி மதிமுகவினர் தகராறில் ஈடுபட்டதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பல முறை அலைக்கழிக்க வைத்ததாக கூறி அங்கிருந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மதிமுகவினர் பூட்டு போட முயன்றதாக கூறப்படுகிறது.