தேசிய ஊரக சுகாதார திட்டத்தின் கீழ், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட செவிலியர்களுக்கு மகப்பேறு பலன்கள் வழங்க மறுப்பதை ஏற்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. செவிலியர்களுக்கு 270 நாட்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க தமிழக அரசு மறுத்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.