தென்காசி மாவட்டம் ஆழ்வார்க்குறிச்சி அருகே பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. பூவன்குறிச்சியில் செய்யது அலி என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோன் செயல்பட்டு வருகிறது. இங்கு, திடீரென தீவிபத்து ஏற்பட்டு பிளாஸ்டிக் பொருட்கள் தீப்பிடித்து எரிந்தன. தகவல் அறிந்து அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.