தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மாசி மக பெருவிழாவையொட்டி நடைபெற்ற தேரோட்டத்தில், கொட்டும் மழையிலும் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். காசிவிஸ்வநாதர், கௌதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் மலர் அலங்காரத்தில் தனிதனியாக தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதனை தொடர்ந்து பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுக்க, மகா மக குளத்தை சுற்றி சுவாமிகள் வலம் வந்தனர்.