கோவை மாவட்டம் ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. மாசாணியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா கடந்த ஜனவரி மாதம் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு வந்தன. அந்தவகையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஊர்வலமாக வந்து குண்டத்தில் இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை வழிபட்டனர்.