தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படும் நிலையில், ராமநாதபுரம் பரமக்குடியில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தியாகி இமானுவேல் சேகரனுக்கு அஞ்சலி செலுத்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பரமக்குடி வருகை தர உள்ள நிலையில், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 3டிஐஜிக்கள், 19 எஸ்பிக்கள், 61 டிஎஸ்பிகள் உள்ளிட்ட 6 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட போலீஸார் மாவட்டம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 150 நவீன சிசிடிவி கேமராக்கள் மற்றும் டிரோன் கேமராக்கள் மூலமும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வெளியூர் பதிவு எண் கொண்ட வாகனங்கள் மாவட்டத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது