நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே பஞ்சநதிக்குளம் மாரியம்மன் கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா சிறப்பாக நடந்தேறியது.3 நாட்களாக நடைபெற்ற யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து, புனிதநீர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கலசங்களில் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது.அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.