கரூர் மாரியம்மன் கோயில் வைகாசி பெருவிழாவை ஒட்டி கம்பம் வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. மாரியம்மன் கோயிலில் வைகாசி பெருவிழாவை ஒட்டி மூன்று கொம்புகள் கொண்ட வேப்பமரம் பாரம்பரிய முறையில் வெட்டி எடுக்கப்பட்டு பாலாம்மாள்புரம் பகுதியில் உள்ள விநாயகர் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. இதனை தொடர்ந்து வேப்பிலை சுற்றப்பட்டு, தண்ணீர், பால் ஊற்றி, மஞ்சள், குங்குமம் இட்டு பக்தர்கள் வழிப்பட்டதையடுத்து, மாரியம்மன் கோயிலுக்கு தோளில் கம்பத்தை சுமந்து எடுத்து சென்றனர். அப்போது கம்பத்திற்கு முன்பு இளைஞர்கள், இளம்பெண்கள் நடனமாடி உற்சாகமடைந்தனர்.