திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கையாக ஒரு கோடியே 75 லட்ச ரூபாய் பெறப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதே போல், 3 கிலோ 412 கிராம் தங்கமும் 5 கிலோ 580 கிராம் வெள்ளியும், 256 அயல் நாட்டு நோட்டுகளும், 988 அயல் நாட்டு நாணயங்களும் காணிக்கையாக பக்தர்களால் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.