திருவண்ணாமலை கலசப்பாக்கம் அருகே கீழ்ப்பாலூர் கிராமத்தில் மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா பிரம்மோடற்சவத்தை முன்னிட்டு, தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. முக்கிய வீதிகளில் வலம் வந்த தேரை ஓம் சக்தி பராசக்தி என்ற பக்தி கோஷங்களுடன் வடம் பிடித்து இழுத்த பக்தர்கள், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மாரியம்மனை தரிசித்தனர்.