விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சேத்தூர் மேட்டுப்பட்டியில் உள்ள மாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா மார்ச் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதனையொட்டி காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.