தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே கரம்பயத்தில் உள்ள முத்து மாரியம்மன் திருக்கோயில் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன், தேரில் எழுந்தருளியதை அடுத்து திரளான பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.