விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தூர் அருகே கோயில் திருவிழாவையொட்டி மாரத்தான் போட்டி நடைபெற்றது. மம்சாபுரம் சிவந்திப்பட்டியில் உள்ள பத்ரகாளி அம்மன் கோயில் பொங்கல் திருவிழாவையொட்டி நடைபெற்ற இம்மாரத்தான் போட்டியில் மாணவிகள், மாணவர்கள் பங்கேற்றனர். சிவந்திபட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தொடங்கிய போட்டி தேவர் சிலை மந்தை வழியாக சென்று மீண்டும் மைதானத்தை வந்தடைந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது.