சென்னை தீவுத்திடலில் தமிழக கூட்டுறவுத்துறை சார்பில் நடைபெற்ற COOP-A-THON மினி மாரத்தான் போட்டியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஓடினர். சர்வதேச கூட்டுறவு ஆண்டு மற்றும் சர்வதேச கூட்டுறவு நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு 2 பிரிவுகளாக நடந்தப்பட்ட இந்த போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான், உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டு ஓடினர். வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், பெரியகருப்பன், சேகர் பாபு உள்ளிட்டோர் ரொக்கப் பரிசு, பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.