ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு கும்பகோணம் பூ சந்தையில் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்து காணப்பட்டது. கடந்த வாரம் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட செண்டுப்பூ கிலோ 90 ரூபாய்க்கும், 80 ரூபாய்க்கு விற்ற செவ்வந்தி பூ கிலோ 300 ரூபாய்க்கும், அரளிப்பூ 600 ரூபாய்க்கும் விற்பனையானது. கடைகள், நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை கொண்டாடுவதற்கு பூக்களை வாங்க வந்திருந்தவர்கள் விலையை கேட்டு சற்று அதிர்ச்சி அடைந்தாலும் பூக்களை வாங்கி சென்றனர்.