கடந்த 2 நாட்களுக்கு முன்பு செம்பல்லி வகை மீனை சாப்பிட்டு பலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்ட நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் ஊரம்பு மீன் சந்தையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். குமரி மற்றும் கேரள பகுதிகளில் உள்ள மீன் சந்தைகளில் செம்பல்லி வகை மீனை வாங்கி சாப்பிட்ட 40க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் சாப்பிட்ட மீனில் விஷத்தன்மை கலந்திருப்பது தெரிய வந்தது. இந்நிலையில் அதிக நாட்கள் கெடாமல் இருக்க ஃபார்மிலின் என்ற ரசாயன பொடி கலந்த மீனாக இருக்கலாம் என்ற சந்தேகம் கிளம்பிய நிலையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அழித்தனர்.