தருமபுரி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலர் ஒரே நேரத்தில் விலகியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் விலகியுள்ள நிலையில், தமிழ் தேசியம் பேசுவதாலும், மாற்று சமூகத்தினரை இழிவாக பேசுவதாலும் கட்சியை கட்டமைக்க முடியாததால் விலகுவதாக அரூர் தொகுதி தலைவர் இளையராஜா தெரிவித்தார்.