காஞ்சிபுரம் அருகே நாகப்பட்டு கிராமத்தில் பலருக்கும் வாந்தி- வயிற்றுபோக்கு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நோய் தொற்றை தடுக்க சுகாதாரத் துறையோ, ஊராட்சி நிர்வாகமோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.