சத்தமாக பேசியதை தட்டிக் கேட்ட நண்பனை கொலை செய்த மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர். மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த கைசு அலின், பௌமின்லியன் ஆகியோர் சென்னை திருவான்மியூரில் ஒரே அறையில் தங்கி வேலை செய்து வந்தனர். இந்த சூழலில், பௌமின்லியன் தனது காதலியுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படவே, சத்தமாகவும் ஆபாசமான வார்த்தைகளாலும் திட்டியுள்ளார். அப்போது, சத்தமாக பேசி தொந்தரவு செய்ய வேண்டாம் என கைசு அலின் கோபமாகக் கூறவே, ஆத்திரமடைந்த பௌமின்லியன் கத்திரிக்கோலை எடுத்து குத்தியதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.