சென்னை துரைப்பாக்கத்தில் இளம்பெண்ணை கொலை செய்து துண்டு, துண்டாக வெட்டி சூட்கேசில் வைத்து வீசிய மணிகண்டன் என்பவரை போலீசார் கைது செய்தனர். சென்னை மணலியை சேர்ந்த தீபா என்பவரை கொலை செய்து அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் வீசிய நபரை துரைப்பாக்கம் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், தீபாவை கொலை செய்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் தீபாவை சுத்தியலால் அடித்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.