நீலகிரி மாவட்டம் பாலகொலாவில் அமைந்துள்ள மானிஹாட மகாசக்தி ஹெத்தையம்மன் கோயிலில் 51-ஆம் ஆண்டு பூ குண்டம் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 48 நாட்கள் விரதமிருந்து வருகை தந்த பக்தர்கள் பூ குண்டம் இறங்கி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.