கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சீசன் காலத்தை விட தற்போது மாங்காய்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஊத்தங்கரை மற்றும் அதனை சுற்றுவட்டார பகுதிகளான சென்ராயன்மலை, சாலமரத்துப்பட்டி, கும்மனூர், கெரிகேப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் 1500 ஏக்கரில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சீசன் காலமான ஏப்ரல், மே மாதங்களை விட இடைப்பருவ மாவிற்கு நல்ல விலை கிடைப்பதாக கூறும் விவசாயிகள் கிலோ 60 முதல் 70 ரூபாய் வரை விற்பனை செய்வதாக மகிழ்ச்சி தெரிவித்தனர். புதிய தொழில்நுட்ப பயன்பாடு குறித்த தோட்டக்கலைத்துறை ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்ற விவசாயிகள் போதிய மானியம் வழங்க வலியுறுத்தினர்.